அறிமுகம்

அனைவருக்கும் வணக்கம் என்பெயர் மருதாத்தாள் ஜெயராம் கடத்தூர் புதூர் என்கின்ற சிறிய கிராமத்தில் ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டு வீட்டுவேலைகளை செய்துகொண்டு இல்லம்தேடிக்கல்வியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.சமீபத்தில் இல்லம் தேடிக்கல்வி நிறுத்தப்பட்டது.அதனால் பல பெண்கள் என்கிட்ட கேட்ட கேள்வி என்னன வேலைவாய்ப்பு இருந்தா சொல்லுங்கள் என்று அதற்கு நான் என்னசெய்தேன் என்று பார்த்தால்.நாம் ஏன் வேலைவாய்ப்பை தேடிப்போகவேண்டும்.வேலை வாய்ப்பை உருவாக்கலாம் என்ற.நோக்கத்தோடு PHOENIX SALES GROUP KADATHUR PUTHUR என்ற வாட்ஸப் விற்பனை குழு ஒன்றை உருவாக்கி அதன்மூலம் வீட்டிலிருந்தே சிறுதொழில் செய்வோரை ஒன்றினைத்து வாங்குவோர்,விற்பனைசெய்வோர்,ரீசெல்லர் அனைவரையும் சேர்த்து 100 பேர் கிட்ட நெருங்கிவிட்டோம்.இதில் டெய்லரிங்,ஆரிஒர்க,வயர்கூடை பின்னுகிறவர்கள்,காஸ்மெடிக்,மசாலாப்பவுடர்,ஊதுபத்தி,கம்யூட்டர்சாம்பிராணி,பஞ்சகவ்யவிளக்கு,டெரகோட்டாநகைகள்,எனஅனைத்து வகைவேலைகள் செய்வோரும்.உள்ளனர்.இதன்மூலம் விற்பனை செய்துவருகின்றனர்.முதன் முதலில் 3 லிட்டர் தேங்காய் எண்ணெய் விற்பனைசெய்தேன்.
"தன்னம்பிக்கைதான் வெற்றிக்கு முதற்படி"தன்னம்பிக்கை இல்லாத எந்த ஒரு செயலும் வெற்றியடைவதில்லை.

Comments